ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு - சி.பி.ஐ-க்கு மாற்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா வழக்கு -  சி.பி.ஐ-க்கு மாற்ற தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
x
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்- அமைச்சர் வீட்டில் இருந்து பணப்பட்டுவாடா பட்டியல் கைப்பற்றியது தொடர்பான எப்ஐஆர் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என அரசு அறிவித்திருப்பதற்காக கண்டனம் தெரிவித்துள்ளார்.  இது குறித்து முறையாக புகார் அளிக்காத தேர்தல் அதிகாரி பெயர்கள் இல்லாமல் எப்.ஐ.ஆர். போட்ட போலீஸ் அதிகாரி உள்ளிட்டோர் மீது  இந்திய தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.  இந்த வழக்கினை சி.பி.ஐ.க்கு மாற்ற இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரே உயர்நீதிமன்றத்தில் வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், தவறும் பட்சத்தில் தேர்தல் நடைமுறை, தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மீதும் வாக்காளர்கள் கொண்டுள்ள நம்பகத்தன்மை பாழ்பட்டுப் போய்விடும் என அறிவுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்