தனுஷ்கோடியில் மணல் புயலை தடுக்க பனை மட்டை வேலி
தனுஷ்கோடியில் மணல் புயலை தடுக்க, பனை மட்டையால் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேலி அமைத்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக் கடல், மன்னார் வளைகுடா கடல், அரபி கடல் ஆகிய முக்கடல் சங்கமிக்கும் தனுஷ்கோடியில், அடிக்கடி மணல் புயல் வீசுகிறது. மணல் நெடுஞ்சாலையை மூடுவதால் வாகனங்கள் திணறியபடி செல்கின்றன. இரு சக்கரம், ஆட்டோவில் செல்லும் பயணிகளை மணல் அதிவேகத்தில் தாக்குவதால் ஊசி குத்துவது போன்ற வலியால் அவதிப்படுகின்றனர். இதனை தடுக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கடற்கரை ஓரங்களில் பனை மட்டை வேலி அமைத்துள்ளனர். முதல் முறையாக சோதனை அடிப்படையில், இந்த வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த முயற்சி வெற்றியடைந்தால் காற்று வீசும் மற்ற இடங்களிலும் இந்த முறை பின்பற்றப்படும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Next Story