வெங்காயத்துக்கு போட்டியாக பூண்டு விலை உயர்வு

வெங்காயத்துக்கு போட்டியாக பூண்டு விலை உயர்வு-கடந்த மாதம் ரூ.60 ஆக இருந்த பூண்டு தற்போது ஒரு கிலோ பூண்டு விலை ரூ.120 என மக்கள் தகவல். விளைச்சல் குறைவால் விலையேற்றம் என தகவல்
வெங்காயத்துக்கு போட்டியாக பூண்டு விலை உயர்வு
x
வெங்காயத்துக்கு போட்டியாக பூண்டு விலையும் அதிகரித்து உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், இமாசலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பூண்டு அதிகம் விளைகிறது. இங்கு இருந்து தமிழகத்துக்கு பூண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் நிலையில் கடந்த மாதம் மதுரையில் ஒரு கிலோ பூண்டு 60 ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளது. தற்போது பூண்டு ​விலை 120-க்கு விற்பனை ஆகிறது. இந்த விலையேற்றத்துக்கு காரணம் விளைச்சல் மற்றும் வரத்து குறைவு தான் காரணம் என்று மதுரை வியாபாரிகள் கூறுகின்றனர். வழக்கமாக 10 முதல் 15 லாரிகளில் வரும் பூண்டு வரத்து  தற்போது இரண்டு லாரியாக குறைந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பூண்டு, வெங்காயம் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்