மேட்டூர் அணையில் வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக அம்மாநில அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் நடப்பு ஆண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனை அடுத்து சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தி உள்ளனர். காவிரி ஆற்றில் குளிக்கவோ கால்நடைகளை குளிப்பாட்டவோ மற்றும் செல்பி எடுக்கவோ கூடாது எனவும் ஒலி பெருக்கிகள் மற்றும் தண்டோரா மூலம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
Next Story