நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க அறிவித்துள்ளது.

நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அ.தி.மு.க அறிவித்துள்ளது.
x
நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து இடைத்தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி தலைமை இன்று அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் எஸ்.ஆர். முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரியில் வெ. நாராயணன் போட்டியிடுவதாக அ.தி.மு.க தெரிவித்துள்ளது.  விழுப்புரம் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. காணை ஒன்றிய செயலாளராக முத்தமிழ்ச்செல்வன் இருந்து வருகிறார். இந்த இரு வேட்பாளர்களும் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க.வுக்கு எதிரான நேரடி போட்டியில் அ.தி.மு.க. இறங்கியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்