சீன அதிபரை மாமல்லபுரத்தில் சந்திக்கிறார் மோடி
பிரதமர் மோடி சீன அதிபர் சந்திப்பை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாமல்லபுரத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் அக்டோபர் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில், ஐந்துரதம், அர்ச்சுணன் தபசு ஆகிய பாரம்பரிய நினைவு சின்னங்களை இரு நாட்டு தலைவர்களும் சுற்றிப்பார்க்கின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து டெல்லியில் இருந்து வந்திருந்த பிரதமர் அலுவலக அதிகாரிகள் 25 பேர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.
Next Story