டிக்டாக் வீடியோ செய்யக்கூடாது என கண்டித்த கணவன் : 40 சவரன் நகைகளுடன் தப்பி ஓடிய புது மணப்பெண்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே டிக் டாக் பதிவு செய்ய கூடாது என கணவர் கண்டித்ததால், 40 சவரன் நகைகளுடன் மாயமான புது மணப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
டிக்டாக் வீடியோ செய்யக்கூடாது என கண்டித்த கணவன் : 40 சவரன் நகைகளுடன் தப்பி ஓடிய புது மணப்பெண்
x
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே டிக் டாக் பதிவு செய்ய கூடாது என கணவர் கண்டித்ததால், 40 சவரன் நகைகளுடன் மாயமான புது மணப்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கடந்த ஜனவரி மாதம், வினிதா மற்றும் ஆரோக்கிலியோ என்பவருக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடந்த 45 நாட்களில், ஆரோக்கியலியோ சிங்கப்பூர் சென்று விட, தனியாக இருந்த வினிதா, டிக் டாக் வீடியோவை பொழுது போக்காக பயன்படுத்தி வந்துள்ளார் . இதன் மூலம், திருவாரூரை  ஒருவருடன்  நட்பு கொண்டதாகவும், இதனை கணவர் ஆரோக்கியலியோ கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. 

தாம் கண்டித்த பின்னரும் வினிதா திருந்த வில்லை என்று அறிந்த ஆரோக்கியலியோ, சிங்கப்பூரிலிருந்து  திரும்பி  வந்து அவரை ,  தாய் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அங்கு சென்ற வினிதா , தமது  சகோதரியின் 25 சவரன் நகைகள் , தமது நகைகள் என மொத்தம், 40 சவரன் நகைகளை எடுத்து கொண்டு  தலைமறைவானார்.

ஏற்கனவே ஆரோக்கியலியோ அதிர்ச்சியில் இருந்த நிலையில் வினிதாவின் தாயார் அருள் ஜெயராணியும் அதிர்ச்சி அடைந்தார்.  உடனே மருமகன்  ஆரோக்கியலியோவுடன் காவல் நிலையம் சென்று மகள் மீது புகார் அளித்தார் . இது குறித்து வழக்கு பதிவு செய்த திருவேகம்பத்தூர் போலீசார், நகைகளுடன் மாயமான புது மணப்பெண்ணை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்