கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை காரணமாக வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x
சேலம்

சேலம் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஓமலூரில் 2 ரயில்வே தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.  

ஆத்தூர்

ஆத்தூர் அருகே பெய்த பலத்த மழையின் காரணமாக தற்காலிக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டது.  

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் பெய்த கன மழையால், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்ததால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.  

கன்னியாகுமரி 

கன்னியாகுமரியில் பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்