அப்பாவிடம் 8 மாதம் பேசாமல் இருந்த மகள் : செல்ல மகளுக்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை

திருத்துறைப்பூண்டி அருகே கோபத்தில் தன்னிடம் பேசாமல் இருந்த மகளின் நிபந்தனையை ஏற்று, தந்தை குளத்தை சுத்தம் செய்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அப்பாவிடம் 8 மாதம் பேசாமல் இருந்த மகள் : செல்ல மகளுக்காக குளத்தை சுத்தம் செய்த தந்தை
x
திருத்துறைப்பூண்டி அருகே கோபத்தில் தன்னிடம் பேசாமல் இருந்த மகளின் நிபந்தனையை ஏற்று, தந்தை குளத்தை சுத்தம் செய்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

அப்பா- மகள் என்றாலே அதீத பாசம் தான். ஊரே பேசும் இந்த அற்புதமான பாசப்பிணைப்பை விரல் விட்டும் எண்ணும் அளவில் சில திரைப்படங்களும் பேசுகின்றன. இதை எல்லாம் மிஞ்சிவிட்டது, இந்த தந்தை- மகளின் பாசம். 

திருத்துறைப்பூண்டி அடுத்த மருதவனம் கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி சிவக்குமார், அடிக்கடி மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். இதை பார்த்த மகள் நதியா, கடந்த 8 மாதமாக தந்தையுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். மிகுந்த வேதனையில் இருந்த  தந்தை, நீ என்னிடம் பேச  என்ன செய்ய வேண்டும் என்று மகளிடம் கேட்டுள்ளார்.  

அதற்கு அந்த சிறுமி, பள்ளி அருகே உள்ள குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார். தனது செல்ல மகளுக்காக உடனடியாக களமிறங்கிய சிவக்குமார், குளத்தில் கிடந்த குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்துள்ளார்.  இந்த நிகழ்வு, மருதவனம் கிராமமக்களை மட்டுமில்லை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்