கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி துன்புறுத்தல் : தலைமை ஆசிரியரை முற்றுகையிட்ட பெற்றோர்
திருவாரூர் மாவட்டம் வடகுடி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
திருவாரூர் மாவட்டம் வடகுடி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. எட்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியை மணிமேகலை, மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்லி , அடித்து துன்புறுத்துவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அரசால் இலவசமாக வழங்கப்பட்ட புத்தகங்களை மாணவர்களுக்கு விற்பனை செய்வதாகவும் தலைமை ஆசிரியை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று மாலை பள்ளிக்கு சென்று பெற்றோர்கள் தலைமையாசிரியர் மணிமேகலையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
Next Story