கும்பகோணத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை - குலசேகரமுடையார் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலை நெல்லை கல்லிடைக்குறிசிக்கு கொண்ட வரப்பட்டு, குலசேகரமுடையார் கோவிலில் ஒப்படைக்கப்பட்டது.
x
நெல்லை குலசேகரமுடையார் கோவிலில் இருந்து 37 ஆண்டுகளுக்கு முன்னர் நடராஜர் சிலை கொள்ளையடிக்கப்பட்டது. சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையில், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில் இந்த சிலை ஆஸ்திரேலியாவில் தனியார் அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, ஆஸ்திரேலியாவில் இருந்து விமான மூலம் டெல்லிக்கும், பின்னர் ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. 
இந்நிலையில் நேற்று நடராஜர் சிலை, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதியின் உத்தரவின் பேரில், சிலை குலசேகரமுடையார் கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக, கல்லிடைக்குறிச்சிக்கு வந்த சிலைக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்