வடகிழக்கு பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - முதலமைச்சர் உத்தரவு
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து தமிழக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை தொடர்ந்து, மழை மீட்பு பணிகளுக்காக 38 கோடியே 52 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து முப்படை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்யவும் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்ற மின் மோட்டார்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, மீட்புக் குழுக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை சென்றடைய தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைக்கவும் போதுமான அளவு மருந்து பொருட்கள் மற்றும் பிளீச்சிங் பவுடர் கையிருப்பு வைத்திருக்கவும் உத்தரவிட்டுள்ளார். இதேபோல, நியாய விலைக் கடைகளில் 2 மாதங்களுக்கு தேவையான பொருட்கள் கையிருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story