டி.எஸ்.பி. காதர் பாட்சா வழக்கை ரத்து செய்ய மறுப்பு
சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாட்ஷா மீதான சிலை கடத்தல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது
சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாட்ஷா மீதான சிலை கடத்தல் வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மறுத்துவிட்டது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் காதர் பாட்ஷா,ஏட்டு சுப்புராஜ் ஆகியோர் ஐம்பொன் சிலைகளை, 6 கோடி ரூபாய்க்கு விற்றதாக புகார் கூறி, தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி காதர்பாஷா உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென்ற காதர் பாட்ஷா மனுவை தள்ளுபடி செய்து சென்னையில் தீர்ப்பளித்தார்.
Next Story