தீவிரவாதியிடம் தேசிய புலனாய்வுத்துறையினர் விசாரணை : வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மலை மீது தேசிய புலனாய்வுத்துறையினர் நடத்திய சோதனையில், வெடிகுண்டு தயாரிக்க உபயோகப்படுத்தப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதியிடம் தேசிய புலனாய்வுத்துறையினர் விசாரணை : வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல்
x
கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டத்தில் கடந்த மாதம் 7ம் தேதி ஜமாத் உல் முஜாஹிதின் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதி கவுசர் என்ற ஜஹிதுல் இஸ்லாம் என்பவனை தேசிய புலனாய்வு போலீசார் கைது செய்தனர். இவர் 2014 ஆம் ஆண்டு நிகழ்ந்த புர்ட்வான், போத்கையா வெடிகுண்டு வழக்குகளில் கைது செய்யப்பட்ட, கவுசரிடம், மலை மீது அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பைப்புகள், 4 பேட்டரி, மஞ்சள், சிகப்பு நிற ஒயர்கள், தீபெட்டி, டேப்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்