முகநூல் மூலம் பெண்களின் செல்போன் எண்கள் திருட்டு : பெண்களை செல்போனில் மிரட்டி பணம் பறித்த இளைஞர்

ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி, பணம் பறித்த சேலத்தைச் சேர்ந்த மோசடி மன்னனை திருப்பூர் போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.
முகநூல் மூலம் பெண்களின் செல்போன் எண்கள் திருட்டு : பெண்களை செல்போனில் மிரட்டி பணம் பறித்த இளைஞர்
x
திருப்பூர்- காங்கேயம் சாலையில் உள்ள நல்லூரைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவரை தொலைபேசியில் அழைத்த மர்ம நபர், அவரது ஆபாசப் படங்கள் தம்மிடம் உள்ளதாகவும், பணம் தராவிட்டால், இணையத்தில் வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதுகுறித்து, கணவனிடம் தெரியப்படுத்திய நிலையில், இருவரும், மர்மநபரின் அடுத்த அழைப்புக்காக காத்திருந்தனர். மீண்டும் தொடர்புகொண்ட மோசடி நபரின் குரல், 5 லட்சம் ரூபாய் வேண்டும் என்றும், போலீசாரிடம் கூறினால், உடனே படத்தை வெளியிடுவேன் என்றும் மிரட்டியது. இதனால், திருப்பூர் மாநகர காவல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்ட நிலையில், விசாரணையை தொடர்ந்த தனிப்படை போலீசார், சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த நரேஷை கைது செய்தனர். சேலத்தை சேர்ந்த பெண்கள் பலரிடம், ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டி, நரேஷ் பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மிரளும் பெண்களிடம் மோசடியும், அதட்டி பேசுவோரின் எண்களை துண்டித்துவிடுவதும் நரேஷின் வாடிக்கை. முகநூலில் செல்போன்களை பதிவிடுவதால், இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படுவது இயல்பாகி விடுகிறது. இணையத்தில் செல்போன் எண்களை திருடும் கும்பல் ஒருபுறமும், எண்களை விற்பனை செய்யும் கூட்டம் மறுபுறமும் அதிகரித்துள்ளது. இதனிடையே, தம்மையும் செல்போனில் ஒருவர் மிரட்டியதாக, திருப்பூரைச் சேர்ந்த மேலும் ஒரு பெண்ணின் புகாரும், சேலத்தில் 3 புகார்களும் பதிவாகி உள்ளன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்