ஒரு சமூகத்தினர் கட்டிய கோவிலை இடித்த வேறு சமூகத்தினர் : சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை - கைது
சேலம் மாவட்டம் புள்ளிபாளையத்தில், ஒரு சமூகத்தினர் கட்டிய கோவிலை மற்றொரு சமூகத்தினர் இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம் புள்ளிபாளையத்தில், ஒரு சமூகத்தினர் கட்டிய கோவிலை மற்றொரு சமூகத்தினர் இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவிலை இடித்தது மட்டுமல்லாமல், கோவிலை சுற்றி வேலி அமைத்து உள்ளே வரவிடாமல் வேறு சமூகத்தினர் தடுத்துள்ளனர். இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட சமூகத்தினர் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் இன்று திடீரென ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் தடுத்து நிறுத்தி போராடியவர்களை கைது செய்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
Next Story