நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக வழக்கு : விசாரணை ஆவணங்களை இன்று தாக்கல் செய்கிறது தனிப்படை

நீட்தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு குறித்த விசாரணை ஆவணங்கள் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக வழக்கு : விசாரணை ஆவணங்களை இன்று தாக்கல் செய்கிறது தனிப்படை
x
நீட்தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் குறித்த வழக்கில் நியமிக்கப்பட்ட தனிப்படை போலீசார் இரண்டு நாளாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடத்தி முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட மாணவர் உதித்சூர்யா முன்ஜாமின் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவருக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ள தனிப்படை போலீசார் அதற்கான ஆவணங்களை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்