தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. ஓசூர், திருத்தணி, நெல்லை, ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
ஒசூர்
ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கனமழையால் வெயில் தாக்கம் தணிந்ததால் பொது மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருத்தணி
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. திருத்தணியில் பல இடங்களில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து தேங்கியதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
நெல்லை
நெல்லையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், டவுன், பாளையங்கோட்டை, கே.டி.சி நகர் பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அம்மாவட்டதின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
ஆண்டிப்பட்டி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி , கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, வாலிப்பாறை, வெள்ளிமலை பகுதிகளில் கனமழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடமலைக்குண்டு, வருசநாடு பகுதிகளில் இரவில் குளிர்ந்த காற்று வீசியது.
Next Story