நடுரோட்டில் கார் கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள் - திமுக பிரமுகர் புகார்
நாகையில், திமுக நிர்வாகியின் காரை உடைத்தும், வாகனங்களை மறித்தும் மதுபோதையில் நடு ரோட்டில் தகராறில் ஈடுபட்ட அமமுக நிர்வாகிகள் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புருஷோத்தமன், திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகிகளுக்கும் முன் விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாகையில் இருந்து கீழ்வேளூர் நோக்கி வந்த புருசோத்தமன் காரை மறித்த அமமுகவைச் சேர்ந்த ஆழியூர் ரமேஷ், கருணாநிதி ஆகியோர், திடீரென அவரை தாக்க முயன்று, கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி உள்ளனர். மேலும், இருசக்கர வாகனத்தை சாலையின் நடுவே போட்டு வாகனங்களை மறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து திமுக பிரமுகர் புருஷோத்தமன் அளித்த புகாரின் பேரில், அமமுக நிர்வாகிகள் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story