ஒகேனக்கல் அருவியில் குளிக்க தொடரும் தடை
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்ததால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்ததால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 13 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை குறைந்ததால் கேஆர்எஸ், கபினி அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து 11 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை தொடர்கிறது.
Next Story