தொழில் முதலீடுகளில் முன்னிலை வகுக்கும் தமிழகம் : பொருளாதார ஆராய்ச்சி நிறுவன ஆய்வில் தகவல்
இந்திய அளவில் அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செயல்முறை பொருளாதார ஆராய்ச்சிகளுக்கான தேசிய கவுன்சில் வெளியிட்டுள்ள மாநில முதலீடுகளுக்கான குறியீடு - 2018 என்கிற அறிக்கையில், டெல்லிக்கு அடுத்தபடியாக முதலீட்டாளர்களை கவரும் மாநிலமாக தமிழகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் இந்தியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாகவும், மருத்துவம், கல்வி, கார் உற்பத்தி என முக்கிய துறைகளில் முன்னிலையில் உள்ளதாகவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதிக சிறப்பு பொருளாதார மணடலங்கள் உள்ள மாநிலமாகவும், 2016 முதல் 2019 வரையான ஆண்டுகளில் 55 ஆயிரத்து 348 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
Next Story