நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரம் - மேலும் 4 மாணவர்கள் மோசடி என தகவல்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் மேலும் 4 மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டிருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது.
x
நீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் தோண்ட தோண்ட, புதிய  புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

தமிழகத்தை உலுக்கிய இந்த சம்பவம் தொடர் பாக மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயண பாபு, விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். உடனடியாக நடப்பாண்டில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்க, ஒவ்வொரு கல்லுாரியிலும் சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும், எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாராயணபாபு உறுதி அளித்தார்.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில், உதித் சூர்யா என்ற மாணவர், ஆள் மாறாட்டம் செய்து,  சேர்ந்ததாக வெளியான செய்தியின் அதிர்ச்சி அலை, ஓய்வதற்குள், மேலும் 4 மாணவர்கள், மோசடியில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. 

சென்னை - தேனாம்பேட்டையை சேர்ந்த மாணவர் உதீத் சூர்யாவும், அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனும் தலைமறைவாகி விட,  போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா தலைமை யிலான தனிப்படை போலீசார், அதிரடியாக வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். உதீத் சூர்யா மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

விசாரணை வளையம் விரிவடையும்போது மேலும், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தால், மொத்த மருத்துவக் கல்வித்துறையும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்