கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து புதிய தகவல்கள் - 2,600 ஆண்டுக்கு முன்னரே எழுத்தறிவு பெற்ற தமிழர்கள்
கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து அமெரிக்க நிறுவனம் பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து அமெரிக்க நிறுவனம் பல புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள், கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்காவை சேர்ந்த பீட்டா என்ற நிறுவனத்திற்குஅனுப்பப்ட்டது. இந்த ஆய்வுகளின் முடிவில் கீழடி பகுதி சுமார் 2 ஆயிரத்து 600 ஆண்டுகள் பழமையான நாகரீகத்தை கொண்டது என தெரிய வந்துள்ளது. இந்த முடிவுளின் மூலம் சுமார் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பே மிக தொன்மையான பண்பாட்டை கொண்டது தமிழகம் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் 2 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
Next Story