மாணவர்களை குறிவைத்து போதை பொருள் "சப்ளை" : கடத்தல் கும்பல் சிக்கியது
வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு படிக்கவரும் மாணவர்களை குறிவைத்து போதைப்பொருட்களை கடத்தி விற்றுவந்த மாணவி உள்பட இருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் அண்மை காலமாக மாணவர்கள் மத்தியில் கொக்கைன் எனப்படும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை நடத்திய அதிகாரிகள், சென்னையை அடுத்து அக்கரையில் வீட்டில் வைத்து கொக்கைன் விற்றுவந்த உகாண்டாவை சேர்ந்த கக்கூசா ஸ்டெல்லா என்ற மாணவியை கைது செய்தனர். பெங்களூருவில் தங்கி பட்டப்படிப்பு படித்துவரும் இவர், பணத்திற்கும், போதைக்கும், ஆசைப்பட்டு நைஜீரியாவை சேர்ந்த ஒருவர் மூலம் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில் பாண்டிச்சேரியில் பதுங்கியிருந்த நைஜீரியாவை சேர்ந்த, அஜ்ஜூ காட்வின் சுக்வி என்பவர் கைது செய்யப்பட்டார். மும்பையில் இருந்து போதைப்பொருள்களை கடத்திவந்து சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் பணக்கார இளைஞர்கள்,வெளிநாடுகளில் இருந்து வந்து படிக்கும் மாணவர்களை குறிவைத்து விற்று வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து கொக்கைன் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story