திறமை இருக்கு... பார்வை எதற்கு... இசைத் துறையில் கலக்கும் பார்வையற்ற சிறுமி
கோவையில் பார்வைத்திறன் இன்றி பிறந்த பெண் குழந்தை ஒன்று, இசைத்துறையில் சாதிக்க தயாராகி வருகிறது.
கோவை காந்திபுரத்தை சேர்ந்த அய்யாச்சாமி நந்தினி தம்பதியின் மகள் நிரஞ்சனா. 8 வயது சிறுமியான இவர் பிறவியிலே கண்பார்வை இழந்தவர். இருந்தபோதும், தளர்வடையாத நிரஞ்சனாவின் பெற்றோர், தங்கள் குழந்தையை வீட்டுக்குள் முடக்கி போட விரும்பவில்லை. நிரஞ்சனாவிற்கு குழந்தை பருவம் முதலே இசையில் ஆர்வம் இருப்பதை அறிந்த அவளின் பெற்றோர், இசை பள்ளியில் அவளை சேர்க்க நினைத்துள்ளனர். ஆனால், கண் பார்வையற்றவர் என்பதால், சிறுமியின் ஆசைக்கு பல இடங்களில் மதிப்பு மறுக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் அலைந்ததின் பயனாய், ஐசக் நெல்சன் என்ற இசை ஆசிரியர் சிறுமிக்கு இசை கற்று கொடுக்க சம்மதித்துள்ளார். அவர் எண்ணியது போலவே, இன்று அவருக்கு பெருமை சேர்த்துள்ளார் நிரஞ்சனா.
தங்கள் மகளைப் போலவே மாற்றுத்திறன் கொண்டவர்கள் சாதிக்க முன்வரவேண்டும் என்பது நிரஞ்சனாவின் பெற்றோர்களின் தாகமாக உள்ளது. இன்று தேசிய கீதம் முதல் இளசுகளின் இந்த கால ராப் மியூசிக் வரை தன் கீ போர்டால் மெட்டு போட்டு கலக்குகிறார் நிரஞ்சனா. இசைத்துறையில் பல விருதுகளை வாரிக்குவித்து வரும் சிறுமி நிரஞ்சனா, வாழ்க்கை லட்சியம் குறித்து கேட்டபோது. இசைத்துறையில் பல விருதுகளை வாரிக்குவித்து வரும் சிறுமி நிரஞ்சனா, வாழ்க்கை லட்சியம் குறித்து கேட்டபோது
Next Story