நிலுவைத் தொகை கோரி கரும்பு விவசாயிகள் வழக்கு : 8 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க நீதிபதி உத்தரவு
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 28 கோடி ரூபாய் நிலுவை தொகையை வழங்குவது குறித்து 8 வாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 28 கோடி ரூபாய் நிலுவை தொகையை வழங்குவது குறித்து 8 வாரத்தில் முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலுவை தொகை வழங்க கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன் விசாரணைக்கு வந்த போது, விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது,. இதனையடுத்து 8 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க தமிழக நிதித்துறை மற்றும் வேளாண் துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டு நீதிபதி கல்யாணசுந்தரம் வழக்கை முடித்துவைத்தார்.
Next Story