ராமசாமி படையாட்சி சிலைக்கு மரியாதை : அமைச்சர்கள், கட்சி தலைவர்கள் பங்கேற்பு

ராமசாமி படையாட்சியாரின் 102 வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
x
ராமசாமி படையாட்சியாரின் 102 வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், எம்.சி சம்பத், துரைகண்ணு, கடம்பூர் ராஜு, சிவி. சண்முகம், பெஞ்சமின் மற்றும் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் ராமசாமி படையாட்சியாரின் சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில், ஒரே மொழி என்பதை ஏற்க முடியாது என்றார். தமிழகத்தில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது என்றும், கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது, ராமதாஸ் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்