41 வெளிநாட்டு நிறுவனங்களுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த விவரம் வெளியீடு
வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் பழனிசாமி 41 நிறுவனங்களுடன் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்கள் குறித்து அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் 14 நாட்கள், 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதில் 41 நிறுவனங்களுடன் முதலமைச்சர் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளார்.
இதன் மூலம் மொத்தம் 8 ஆயிரத்து 835 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. மேலும், இதனால் 35 ஆயிரத்து 520 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் விவரங்களை, அறிக்கையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதன்படிஅமெரிக்காவில், 35 நிறுவனங்களில் இருந்து 5 ஆயிரத்து 85 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 24 ஆயிரத்து 720 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
இதேபோல் துபாயில், 6 நிறுவனங்களில் இருந்து 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 10 ஆயிரத்து 800 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
Next Story