கூடுதல் கல்வி கட்டணம் குறித்து புகார் அளித்த நபருக்கு கொலை மிரட்டல் - கல்வி அதிகாரி மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா உள்ளிட்ட 5 பேர் மீது நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கூடுதல் கல்வி கட்டணம் குறித்து புகார் அளித்த நபருக்கு, கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில், தூத்துக்குடி மாவட்ட கல்வி அதிகாரி வசந்தா உள்ளிட்ட 5 பேர் மீது நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கில் நெல்லை குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
Next Story