முதல் நாளிலேயே எதிர்பார்ப்பை விட அதிக உறுப்பினர் சேர்க்கை - உதயநிதி ஸ்டாலின்
தி.மு.க.வின் இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் தொடங்கிய நிலையில் முதல் நாளிலேயே எதிர்பார்த்ததைவிட அதிக உறுப்பினர்களை சேர்த்துவிட்டதாக அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வின் இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே எதிர்பார்த்ததைவிட அதிக உறுப்பினர்களை சேர்த்துவிட்டதாக அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேர் என இரண்டு மாத காலத்திற்குள், 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது இளைஞர் அணியின் இலக்கு மட்டுமே என்று தாய் கழக நிர்வாகிகள் ஒதுங்காமல் உழைத்ததால் தான் இந்தளவு வெற்றி சாத்தியமாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Next Story