வாணியம்பாடி அரசு மருத்துவமனை கழிவறையில் கேட்பாரற்று இறந்த நிலையில் கிடந்த பெண் சிசு

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனை கழிவறையில் கேட்பாரற்று பெண் சிசு இறந்த நிலையில் கிடந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
வாணியம்பாடி அரசு மருத்துவமனை கழிவறையில் கேட்பாரற்று இறந்த நிலையில் கிடந்த பெண் சிசு
x
வாணியம்பாடி அரசு மருத்துமனையின் பெண்கள் கழிப்பறையில், அதிகாலை சுத்தம் செய்ய மருத்துவமனை ஊழியர்கள் சென்ற போது, அங்கு தலை குப்புற கவிழ்ந்த நிலையில் ஒரு சிசு இருந்துள்ளது. 

அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக தலைமை மருத்துவர் அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து மருத்துவர்கள் உள்ளே சென்று சிசுவை கைப்பற்றினர். கழிவறைக்குள் தலை குப்புற இருந்ததால், நீண்ட நேரம் போராடி சிசுவை மீட்டனர். 

பின்னர் அதை சோதித்து பார்த்த போது, 1.4 எடை கொண்ட பெண் சிசு என்பது தெரிய வந்தது. இந்நிலையில் இறந்து போன அந்த சிசு உள் நோயாளிகள் யாருடையதும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிசு யாருடையது என்பது குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரித்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்