பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் : பேனர் வைத்த அதிமுக பிரமுகரை பிடிக்க தனிப்படை

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவத்தில், தலைமறைவாக உள்ள அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
பேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் : பேனர் வைத்த அதிமுக பிரமுகரை பிடிக்க தனிப்படை
x
சென்னையை குரோம்பேட்டை பவானி நகரில் பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் பின்னால் வந்த லாரி ஏறி உயிரிழந்தார்.  இந்த சம்பவம், சிசிடிவி காட்சியாக வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக லாரி ஓட்டுநர் மனோஜ் கைது செய்யப்பட்டுள்ளார் இதே போல, பேனர் வைத்த பேனர் அடித்து கொடுத்த அச்சகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில், பேனர் வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனிடையே தேடப்பட்டு வந்த ஜெயகோபால் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு, பள்ளிக்கரணை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியதால், போலீசார் அங்கு விரைந்த‌னர். ஆனால், அங்கு ஜெயகோபால் இல்லாத‌தால் ஏமாற்றம் அடைந்த போலீசார், தனிப்படை அமைத்து அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்