மலைநம்பி கோயிலில் உறியடி திருவிழா : கருட வாகனத்தில் சுவாமி அருள்பாலிப்பு
ஆவணி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலில் உறியடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஆவணி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு, நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலில் உறியடித்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வனப்பகுதியில் நடந்த இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் திருமலைநம்பி கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து 8 வெற்றிலை அலங்காரம்
ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு முதன் முறையாக ஒரு லட்சத்து எட்டு வெற்றிலை அலங்காரம் செய்யப்பட்டது. இதை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையும், அர்ச்சனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நரிக்குறவர்கள் நடத்தும் வினோத திருவிழா
சிவகங்கையில் நரிக்குறவர்கள் நடத்திய வினோத திருவிழாவில் எருமைகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. சிவகங்கையில் உள்ள பையூர் பழமலை நகரில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த மக்கள் தங்கள் குலதெய்வத்தை வழிபடும் வினோத நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். எருமைகளை பலியிட்டு அதன் ரத்தத்தை குடித்தல், பொங்கலிடுதல், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல், மேள தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டம் என பல்வேறு விதமான கொண்டாட்டங்கள் இந்த திருவிழாவில் அரங்கேறின.
Next Story