சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சைபர் க்ரைம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சைபர் க்ரைம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சைபர் க்ரைம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அக்கல்லூரி முதல்வர் வைசிலின் சுஜி, குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து திருச்செந்தூர் நீதிமன்ற சார்பு நீதிபதி பரமேஸ்வரி, சைபர் கிரைம் பற்றியும் அதற்கான தண்டனை காலம் மற்றும் சட்டப்பிரிவுகளை எடுத்துரைத்தார். சமூக வலைதளங்கள் மூலம் ஏற்படும் தீமைகள் பற்றியும், சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாகவும் திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாரத் விவரித்தார். நிகழ்ச்சியில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் வட்ட சட்ட பணிக்குழுவினர் கலந்து கொண்டனர்.
Next Story