வட்ட வழங்கல் அதிகாரி மீது தாக்குதல் : அதிமுக பிரமுகர் மீது வழக்கு
திண்டிவனத்தில் வட்ட வழங்கல் அலுவலரை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.
திண்டிவனத்தில் வட்ட வழங்கல் அலுவலரை அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. திண்டிவனம் வட்ட வழங்கல் அலுவலராக பணியாற்றி வரும் ரபியுல்லா என்பவரை, அதிமுக பிரமுகர் பூட்டு முருகன் என்பவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் உடலில் முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் நான்கு இடங்களில் ஏற்பட்ட காயங்களுடன் ரபியுல்லா திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து திண்டிவனம் போலீசார் வட்டவழங்கல் அலுவலர் மீது தாக்குதல் நடத்திய பூட்டு முருகனை கைது செய்தனர்.
Next Story