பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் : வெவ்வேறு சாதியை சேர்ந்த காதலர்கள் போலீசில் தஞ்சம்
கிருஷ்ணகிரி மாவட்டம், எட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரும் பனங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த, சந்தியாவும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், எட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவரும் பனங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த, சந்தியாவும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, திருமணம் செய்ய முடிவெடுத்த இருவரும் கோவையில் கடந்த 1- ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, பாதுகாப்பு கேட்டு, காதலர்கள் இருவரும் ஒசூர் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story