விளம்பர பேனர்களை அகற்றிய பின்னரே விழாவில் பங்கேற்ற அமைச்சர்
நீலகிரி மாவட்டத்தில், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் வேலுமணி விளம்பர பேனர்களை அகற்றினால் தான் நிகழ்ச்சிக்கு வருவேன் என்று கூறியதை தொடர்ந்து, இரவோடு இரவாக பேனர்கள் அகற்றப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர் வேலுமணி விளம்பர பேனர்களை அகற்றினால் தான் நிகழ்ச்சிக்கு வருவேன் என்று கூறியதை தொடர்ந்து, இரவோடு இரவாக பேனர்கள் அகற்றப்பட்டன. பின்னர், உதகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், சுற்றுலா தலமான தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்லும் 1 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட மூன்று கிலோ மீட்டர் சாலையை திறந்து வைத்தார். இதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்குவதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிப்பதாக தெரிவித்தார்.
Next Story