நெல்லை மாவட்டத்தில் 3 அணைகளில் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஆணை
நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து வரும் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு 2 ஆயிரத்து 500 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து, வரும் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு 2 ஆயிரத்து 500 மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நெல்லை, தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பிசான பருவ முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள ஏதுவாகவும் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் சிறப்பு நிகழ்வாக தண்ணீர் திறக்கப்படுவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தண்ணீர் திறப்பின் மூலம், 2 மாவட்டங்களிலும் சேர்த்து 86 ஆயிரத்து 107 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Next Story