10 லட்சம் ரூபாய் கேட்டு செவிலியர் கடத்தல் : மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செவிலியரை 10 லட்சம் ரூபாய் கேட்டு கடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த வித்யா . சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருநள்ளாறில் உள்ள தனது நண்பரின் திருமணத்திற்கு வித்யா சென்றார். இந்நிலையில், வித்யாவின் தந்தைக்கும், அண்ணனுக்கும் மர்ம நபர்கள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு, வித்யாவை கடத்திவிட்டதாகவும், 10 லட்சம் ரூபாய் தரும்படியும் மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அண்ணன் விக்னேஷ், தங்கை கடத்தப்பட்டது குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, வித்யா கடத்தப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story