இலங்கை பிரதமரை சந்தித்தார் திமுக எம்பி கனிமொழி : மீனவர்களின் படகுகளை விடுவிக்க கோரிக்கை
கொழும்பு அலரி மாளிகையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கையை திமுக எம்.பி கனிமொழி சந்தித்தார்.
அப்போது, தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினை குறித்து கனிமொழி எம்.பி. இலங்கை பிரதமரிடம் எடுத்துரைத்தார். மேலும், இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள தமிழக மீனவர்களின் படகுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். முன்னதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சரையும் கனிமொழி எம்.பி., ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி ஆகியோர் சந்தித்து மீனவர்கள் பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்தினர்.
Next Story