"பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் 2வது இடம்" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே, தமிழகம் இரண்டாவது இடம் வகிப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
x
பொருளாதார வளர்ச்சியில் நாட்டிலேயே, தமிழகம் இரண்டாவது இடம் வகிப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற வணிக தொழில் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏற்பட்டாலும், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சரிவு இல்லை என்றார். நகரத்தில் வீடு கட்டுவோர்  எளிதில் அனுமதி பெறும் வகையில் வரும் டிசம்பர் மாதம் முதல் ஆன்லைன் முறை நடைமுறைக்கு வர உள்ளதாக கூறினார். தமிழகத்தில் 13 புள்ளி 91 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி தர அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்