ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரிடம் கருத்து கேட்பு : மனித உரிமை ஆணையம் நடவடிக்கை
மனித உரிமை ஆணையம் சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள, அண்ணா நுாற்றாண்டு நுாலக வளாகத்தில் பழங்குடியின மக்கள் சந்திக்கும் அடக்குமுறைகள் மற்றும் பிரச்சனைகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான 600க்கும் மேற்பட்ட வழக்குகளில் 79 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், அந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று மனித உரிமை காப்பாளர் ஹென்றி கோரிக்கை விடுத்துள்ளார். சமூக காப்பாளர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாகவும் அவை தடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Next Story