சேலத்தாம்பட்டி ஏரியை தூர்வாரும் பணிகள் தொடக்கம்
சேலம் சிவதாபுரத்தில் உள்ள சேலத்தாம்பட்டி ஏரியை தூர்வாரும் பணியில் அரசுடன் இணைந்து, சுற்றுவட்டார கிராம மக்கள் ஈடுபட்டனர்.
சேலம் சிவதாபுரத்தில் உள்ள சேலத்தாம்பட்டி ஏரியை தூர்வாரும் பணியில் அரசுடன் இணைந்து, சுற்றுவட்டார கிராம மக்கள் ஈடுபட்டனர். சேலத்தாம்பட்டி ஏரியின் மூலம், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பயன்பெற்று வருகின்றன. இந்நிலையில் ஏரியின் தெற்குகரை பகுதியில் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து, புதர்மண்டி காணப்பட்டது. இதனையடுத்து, மத்திய அரசின் ஜல்சக்தி துறையுடன் இணைந்து, சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏரியை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஏரியில் கூடுதலாக தண்ணீர் சேமிக்க முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்
Next Story