"5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு" : "நடப்பு கல்வி ஆண்டு முதல் அமல்" - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 10,11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டு முதல் 5 வது மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்
5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்படுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ல் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்கள் அடிப்படையில், தொடக்க கல்வி இயக்குனரின் கருத்துவை தமிழக அரசு பரிசீலித்து, இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு முதன்மை செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் 2019 - 2020 -ஆம் கல்வியாண்டிலிருந்து 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வேண்டாம் என அரசு ஆணையிடுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொது தேர்வு நடத்துவதற்கான அறிவிப்புகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Next Story