பேஸ்புக் மூலம் மருத்துவர் என ஏமாற்றி பெண் உடன் திருமணம் - வரவேற்பு நிகழ்ச்சியில் வைத்து மணமகனை கைது செய்த போலீஸ்
ஃபேஸ்புக் மூலம் மருத்துவர் என ஏமாற்றி பெண்ணை திருமணம் செய்த நபரை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வைத்து போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் கார்த்திக். இவருக்கும், கொளத்தூரை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் 11ஆம் தேதி, கொளத்தூரில் உள்ள கோயிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. தான் ஒரு மருத்துவர் என்றும் கோவையில் மருத்துவமனை வைத்திருப்பதாகவும் கூறி பெண் வீட்டாரிடம் 15 லட்ச ரூபாய் கார்த்திக் வரதட்சனையாக பெற்றுள்ளார். இந்நிலையில், இருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒருவர் கார்த்திக் மருத்துவரே இல்லை என்று கூறியதை தொடர்ந்து சந்தேகமடைந்து கார்த்திக்கிடம் அது குறித்து விசாரித்த பெண் வீட்டார், போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் கார்த்திக்கை பிடித்து நடத்திய விசாரணையில் தனியார் மருத்துவ கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் மட்டும் மருத்துவ படிப்பு படித்துவிட்டு நிறுத்திவிட்டதாக கார்த்திக் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர்.
Next Story