அக்டோபரில் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு? - பாதுகாப்பு ஏற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம்
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் அக்டோபர் மாதம் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச உள்ளனர். அக்டோபர் 11-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை இந்த சந்திப்பு நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சந்திப்பு நடைபெற உள்ள மாமல்லபுரத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய வெளியுறவு துறை அதிகாரிகள், பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள், உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டி, தமிழக டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Next Story