மாவட்டங்கள் பிரிப்பு - முதலமைச்சர் ஆலோசனை
மாவட்டம் பிரிக்கப்படுதல் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
மாவட்டம் பிரிக்கப்படுதல் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். வேலூர் மாவட்டம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தினத்தின் போது அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்துவது - எல்லைகளை முடிவு செய்வது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தவிர, மேலும் பல மாவட்டங்களை பிரிக்க பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்து கொண்டிருப்பதால், அதற்கான சாத்திய கூறுகள் தொடர்பாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story