ஏல சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி என புகார் : பெண் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு
நாமக்கல் அருகே ஏல சீட்டு நடத்தி மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 50 க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அருகே ஏல சீட்டு நடத்தி மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 50 க்கும் மேற்பட்டோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணேசபுரத்தில் வசிக்கும் கலைச்செல்வி, அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் ஏலச்சீட்டு நடத்துவதாக கூறி சுமார் 20 கோடிரூபாய் வரை மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் துறையினர் முதல் குற்றவாளியான கலைச்செல்வி உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story