சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்

சத்தியமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விடிய விடிய நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்
x
சத்தியமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  விடிய விடிய நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. சத்தியமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணங்களை பதிவு செய்வதற்கு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார் வந்துள்ளது. இதனை தொடர்ந்து ஈரோடு லஞ்சஒழிப்புத்துறை டிஎஸ்பி கருணாகரன் தலைமையில் 8 க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மாலை 6 மணி முதல் அங்கு சோதனை மேற்கொண்டனர். இன்று  அதிகாலை வரை நடைபெற்ற சோதனையில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்