30 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடு இடிந்து விபத்து - விவசாய கூலித் தொழிலாளி உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம் திருமழபாடி அருகே தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி விவசாய கூலித் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் விளாகத்தில் 1989 ஆம் ஆண்டு வீடு இல்லாத மக்களுக்கு, தொகுப்பு வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் 40 வீடுகள் கட்டித் தரப்பட்டது. அவ்வாறு கட்டி தரப்பட்ட தொகுப்பு வீட்டில் அப்பகுதியை விவசாய கூலித் தொழிலாளி ஜெயசீலன் குடியிருந்து வந்துள்ளார். கடந்த ஒருவாரமாக பெய்த மழையால், ஜெயசீலன் வீட்டின் சுவர் சேதமடைந்த இருந்ததாக கூறப்படுகிறது. முறையாக நீண்டக்காலமாக பராமரிப்பு இன்றி உள்ள வீடு என்பதால், மனைவி கோமதி, மகள் ஜெயப்ரியா, மகன் ஜெயபிரகாஷ் ஆகியோரை பக்கத்து வீட்டில் படுக்க கூறியுள்ளார். இந்நிலையில், நேற்றிரவு எதிர்பாராதவிதமாக வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி ஜெயசீலன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வெங்கனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story